கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(12) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகள், டெப் கணினிகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சிகரெட்டுக்களையும், கஞ்சாவையும் பொதி செய்ய பயன்படுத்தப்படும் பெட்டிகளுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணும், 45 வயதுடைய பெண்ணும் ஆவர்.

சந்தேகநபர்கள் இருவரும் டுபாயில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் கொண்டு வந்த 5 பயணப் பொதிகளில் இருந்து 132 நவீன கையடக்கத் தொலைபேசிகள் , 14 டெப் கணினிகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சிகரெட்டுக்களையும் கஞ்சாவையும் பொதி செய்ய பயன்படுத்தப்படும் 1,700 பெட்டிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களின் மொத்தப் பெறுமதி 50 இலட்சம் ரூபா என விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply