பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? – ஓர் ஆய்வு
எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம்.
2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களில் ஒருபிரிவினர் இன்றும் அதனை ஏற்க மறுக்கின்றனர்.
இப்படியான சூழலில், பிரபாகரனின் கடைசி தருணங்கள் குறித்து இந்த கட்டுரை அலசுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் 2008ம் ஆண்டு, நவம்பர் 27-ஆம் தேதி மாவீரர் தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையே அவருடைய கடைசி உரையாக பதிவாகியுள்ளது.
அதற்கடுத்த சில மாதங்களில் அவருடைய வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று யாரும் நினைக்கவில்லை, ஆனால் அவருடைய வாழ்வின் கடைசி தருணம் வரை அவருடைய மனோபாவம் மாறவே இல்லை.
1976-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை தொடங்கினாலும் கூட பிரபாகரன் நீண்ட காலமாக பெரிதும் அறியப்படாத ஒருவராகவே திகழ்ந்தார்.
1982 மே மாதம் சென்னையில் முதலும் கடைசியுமாக பிரபாகரன் பிடிபட்ட போது, இந்திய அரசு அவர் மீது அதிக கவனம் செலுத்தவில்லை.
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவத்திற்கு சவால் விடுவதற்கும் தயங்காத வகையில், பிரபாகரனின் செல்வாக்கு மற்றும் நம்பிக்கை அபரிமிதமாக அதிகரித்தது.
பிரபாகரனின் பாணி
இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தில் சிங்களர்கள் கொலைக்குப் பிறகு, பிரபாகரன் குறித்து பெரும் விவாதம் எழுந்தது.
அதன்பிறகு, இலங்கையில் போட்டி தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இது, தமிழர்கள் மத்தியில் தனிப்பெரும் தலைவராக உருவாவதற்கான முயற்சியாகவே நம்பப்பட்டது.
பிரபல பத்திரிகையாளர் எம்கே நாராயண் சுவாமி தன்னுடைய ‘தி ரௌட் ஆஃப் பிரபாகரன்’ (The Route of Prabhakaran) எனும் புத்தகத்தில், “பிரபாகரனின் ஒவ்வொரு வார்த்தையும் சட்டம் போன்றது. அவரை யாரும் சவால் செய்ய முடியாது. அவருக்கு முன் தலை தாழ்ந்து, அவர் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, உங்களால் தமிழ் ஈழத்துக்காக போராட முடியும்,” என எழுதியுள்ளார்.
“அவருடன் உடன்படவில்லையென்றால், ஒன்று நீங்கள் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேற வேண்டும், அல்லது உலகை விட்டு நீங்க வேண்டும்.
அவரை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர் ‘துரோகி’ என அறிவிக்கப்படுவார். சோவியத் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தன்னுடைய எதிரிகளை எப்படி நடத்தினாரோ, அவர் அப்படி நடத்தப்படுவர்.”
பிரபல பத்திரிகையாளர் எம்கே நாராயண் சுவாமி எழுதிய ‘தி ரௌட் ஆஃப் பிரபாகரன்’ புத்தகம்
அடுத்தடுத்து நடந்த கொலைகள்
விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் குறிப்பிட்ட சிலருக்கு குறிவைத்தது. பிரபாகரனுக்கோ அல்லது விடுதலைப் புலிகள் அமைப்புக்கோ சில சமயங்களில் உதவியிருந்தவர்களும் கூட இலக்காயினர்.
பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அனிதா பிரதாப், தன்னுடைய ‘ஐலாண்ட் ஆஃப் பிளட்’ (Island of Blood) எனும் புத்தகத்தில், “பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து புத்தகம் எழுத திட்டமிட்டிருந்த நபர் ஒருவர், பாரிஸில் தன்னுடைய இல்லத்தின் முன்பாக சுட்டு கொலை செய்யப்பட்டார்.” என எழுதியுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டார். வெளியுறவு அமைச்சர் (தமிழர்) ஒருவர் நீச்சல் குளத்தில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இலங்கை ஜனாதிபதி ஒருவரும் மே தின பேரணியில் உரையாற்றியபோது கொலை செய்யப்பட்டார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது தற்கொலை தாக்குதலில் கொலை செய்யப்பட்டார்.
ராஜிவ் காந்தி
,ராஜிவ் காந்தி கொலையிலும் பிரபாகரன் தொடர்புபடுத்தப்படுகிறார்.
பிரபாகரனின் சரிவு
ஒரு கட்டத்தில், இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரபாகரனின் கட்டுப்பாடு ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு சுருங்கும் நேரம் வந்தது.
“முதன் முறையாக விடுதலைப் புலிகள் அமைப்பு போராளிகளின் கண்களில் நான் பயத்தை பார்த்தேன். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளை நெருங்கி பார்த்துவரும் எனக்கு இது முற்றிலும் புதிய விஷயமாக இருந்தது,” என பெயர் குறிப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
“மே 17 அன்று, பிரபாகரன் தன் நெருங்கிய கூட்டாளிகளிடையே, தான் போர்க்களத்திலிருந்து ஓடவோ அல்லது ஆயுதங்களை கைவிடவோ மாட்டேன் என்றும், யாராவது போராட்டத்திலிருந்து விலகிக்கொள்ள விரும்பினால், அதை அவர்கள் தாராளமாக செய்யலாம் என்றும் கூறினார்.
குடிமக்களுடன் இணைய யாராவது விரும்பினால், அவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அங்கே செல்லலாம். எதிரியின் கைகளால் வீழ்த்தப்படுவதை தவிர்க்கும் விதமாக யாரேனும் இறக்க விரும்பினால், சயனைடை உட்கொண்டு இறக்கலாம்.”
சூரிய கடவுளின் அவதாரம் என்றும் யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர் என்றும் தன் ஆதரவாளர்களால் அழைக்கப்பட்ட ஒருவருக்கு இது மோசமான பிரியாவிடையாக இது இருந்தது.
தான் விரும்பிய அனைத்தையும் சொல்வதற்கு மே 17-ஆம் தேதியை பிரபாகரன் தேர்ந்தெடுத்தது தற்செயல் நிகழ்வு அல்ல.
பிரபாகரனும் எட்டாம் எண்ணும்
தான் விரும்பிய அனைத்தையும் சொல்வதற்கு மே 17-ஆம் தேதியை பிரபாகரன் தேர்ந்தெடுத்தது தற்செயல் நிகழ்வு அல்ல.
பிரபாகரனின் பழைய கூட்டாளியான ராஜேஷ் குமார் பிரிட்டனில் வசிக்கிறார், அவர் தற்போது ராகவன் எனும் பெயரில் அறியப்படுகிறார்.
அவர் கூறுகையில், “பிரபாகரன் 8 எனும் எண்ணை துரதிருஷ்டவசமான எண்ணாக கருதினார். பிரபாகரன் எந்தவொரு வேலையையும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் செய்வதை தவிர்ப்பார்,
அது எதிர்காலத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என கருதினார். இந்த நாட்களில் மறைவிடத்திலேயே நாள் முழுவதும் பதுங்கியிருந்து அடுத்த நாளே வெளியில் வரும் அளவுக்கு அவருக்கு அதன் மீது வலுவான மூடநம்பிக்கை இருந்தது” என்றார்.
, மெய்க்காப்பாளருடன் பிரபாகரன்
தோல்விகளால் குலைந்த மன உறுதி
2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மன்னார் மாவட்டம் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன்பின், நவம்பர் மாதத்தில் விடுதலைப் புலிகள் வியூக ரீதியாக தங்களின் முக்கிய இடங்களான பூநகரி மற்றும் மாங்குளத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.
2008-ஆம் ஆண்டு மே மாதம், விடுதலைப் புலிகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த தளபதி கண்டிய பாலசேகரன் எனும் பால்ராஜ் மாரடைப்பில் இறந்தது பிரபாகரன் பெரும் பின்னடைவாக அமைந்தது.
பாலசேகரனின் நினைவாக மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்தது. பாலசேகரன் இறந்திருக்காவிட்டால், இலங்கை ராணுவத்துடனான போரின் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் என, அந்த அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் நம்புகின்றனர்.
2009-ஆம் ஆண்டுவாக்கில் பிரபாகரன் மேலும் அதிகமான பின்னடைவுகளை சந்திக்க ஆரம்பித்தார். இலங்கை அரசுப் படைகள், முதலில் பரந்தன் நகரத்தையும் பின்னர் அதன் அருகிலுள்ள கிளிநொச்சியையும் கைப்பற்றின.
இதில், கிளிநொச்சி, விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்படும் பகுதிகளின் தலைநகரமாக கருதப்பட்டது. கிளிநொச்சியில் தோல்வியடைந்தது, விடுதலைப் புலிகள் அமைப்பினரின் மன உறுதியை கடுமையாக குலைத்தது.
இந்த சமயத்தில் தான் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை பிரபாகரன் சந்தித்தார்.
விடுதலைப் புலிகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த ராணுவப் பிரிவு தலைவராக கண்டிய பாலசேகரன் இருந்தார்.
இலங்கைக்கு அமெரிக்கா நெருக்கடி
விடுதலைப் புலிகளின் முக்கியமான ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த வேலாயுதன் தயாநிதி எனும் தயா மாஸ்டர் மற்றும் பிரபாகரனின் உரைகளை மொழிபெயர்த்த குமார் பஞ்சரத்னம் எனும் ஜார்ஜ் இருவரும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததால் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது.
அப்போது ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸவும், அவரது இளைய சகோதரர் கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஸ தலைமை வகித்தார்.
எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், “சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்காவிடமிருந்து கோட்டாபய ராஜபக்ஸ பெரும் அழுத்தத்தை சந்தித்தார். அமெரிக்க குடியுரிமையையும் கொண்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ, பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க பிரதிநிதிகளிடம் எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை. எனினும், இதுதொடர்பான தன்னுடைய கவலைகளை ராணுவ தளபதிகளிடம் மே 14-ஆம் தேதி பகிர்ந்துகொண்டார்,” என எழுதியுள்ளார்.
“இன்னும் எவ்வளவு காலம் இந்த போர் தொடரும் என அவர் கேள்வியெழுப்பினார். இந்த போர் கூடிய விரைவில் வெற்றியுடன் முடிவுற வேண்டும், இல்லையெனில், அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்கொள்வது கடினமாகிவிடும்.”
அப்போது கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்
சண்டையை தொடர பிரபாகரன் முடிவு
மே 16 அன்று, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளின் கடைசி கட்ட பாதுகாப்பையும் அழித்தது.
ஜி-11 மாநாட்டில் பங்கேற்றிருந்த நிலையில், இந்த செய்தியை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, விடுதலைப் புலிகளை ராணுவம் வெற்றி கொண்டதாக முன்கூட்டியே அறிவித்தார்.
விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்கள் தலைவர் குமரன் பத்மநாதன் எனும் கேபி, கோலாலம்பூரில் அதே நாள், “சண்டை இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. எங்களது துப்பாக்கிகளை கைவிடுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.” என தெரிவித்தார்.
பிரபாகரன் இந்த சண்டையை தொடர முடிவெடுத்ததால், மஹிந்த ராஜபக்ஸவும் குமரன் பத்மநாதனும் இவ்வாறு பேசியதாக தெரிகிறது.
விடுதலைப் புலிகள் பல நாட்களாக குளிக்கக் கூட முடியாத அளவுக்கு சண்டை கடுமையானதாக இருந்தது.
அவர்களுக்கான உணவுப் பொருட்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன. விடுதலைப் புலிகளின் கொரில்லா படையினர் (எதிரிகள் மீது திடீர் தாக்குதல் நடத்துபவர்கள்) சிலர், இலங்கை படையினரால் பிடிக்கப்படக் கூடாது என்பதற்காக, தற்கொலை செய்துகொண்டனர்.
,
விடுதலைப் புலிகளின் கடைசிப் படைகளை 1600 சதுர மீட்டருக்குள் இலங்கை ராணுவம் நெருக்கியது.
கடைசியாக உயிருடன் பார்க்கப்பட்டது எப்போது?
மே 17 அன்று இரவு, விடுதலைப் புலிகளின் கடைசிப் படைகளை 1600 சதுர மீட்டருக்குள் இலங்கை ராணுவம் நெருக்கியது. இலங்கை ராணுவம் மூன்று புறங்களில் சூழ்ந்திருந்தது. நான்காவது பக்கத்தில், இலங்கை கடற்படை தொடர்ந்து கண்காணித்து வந்த நந்திக்கடல் இருந்தது.
மே 17 அன்று விடுதலைப் புலிகளின் பல தளபதிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையடுத்து, அந்நாள் அந்த அமைப்புக்கு மிகவும் துரதிருஷ்டவசமான நாளாக அமைந்தது.
விடுதலைப் புலிகளின் கொரில்லா படையை சேர்ந்த ‘எஸ்கே’ பின்னொரு நாளில் அளித்த நேர்காணலில், “மே 17 அன்று கடைசியாக பிரபாகரன் உயிருடன் காணப்பட்டார். 6 மணிக்கு பிரபாகரன் இருந்த இடத்தை நான் அடைந்தேன். எங்களுடைய உணவு முழுவதும் தீர்ந்துவிட்டது” என்றார்.
“நம்பினால் நம்புங்கள், தமிழ் ஈழம் எனும் கனவு சிதைய போகிறது என்பதை உணர்ந்திருந்த போதிலும், பிரபாகரன் மிகவும் சாதாரணமாகவே காணப்பட்டார்.”
பிரபாகரனின் மகன் மரணம்
அடுத்த நாள், மீதமுள்ள விடுதலைப் புலிகள், ராணுவ முற்றுகையை தகர்க்க முயற்சித்தனர். அதில் அவர்கள் வெற்றியடைந்தனர், ஆனால், 30 நிமிடங்களில் இலங்கை படையினர் மீண்டும் குழுக்களாக இணைந்தனர்.
இந்த முறை இலங்கை படையின் எதிர் தாக்குதலில், விடுதலைப் புலிகள் படையை சேர்ந்த தளபதிகள் பலரும் பிரபாகரனின் 24 வயது மகன் சார்லஸ் ஆண்டனியும் கொல்லப்பட்டார்.
ஆண்டனியின் உடலை இலங்கை படையினர் தேடியபோது, அவரிடம் 23 லட்சம் இலங்கை பணம் இருந்ததை கண்டறிந்தனர்.
53வது பிரிவின் படைத்தளபதியாக இருந்த கமல் குணரத்ன, அச்சமயத்தில் பிரபாகரன், பொட்டு அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்) மற்றும் சூசை தவிர விடுதலைப் புலிகளின் தலைமை பொறுப்பில் இருந்த பலரும் அழிக்கப்பட்டதாக கூறினார்.
இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரன் குறித்த செய்தி வரும் வரை சண்டை தொடரும் என தெளிவாக கூறினார்.
பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி (வலதுபக்கம் உள்ளவர்)
பிரபாகரன் மரணம் குறித்த செய்தியை பெற்ற குணரத்ன
மே 19 அன்று வரை பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற செய்தி மேஜர் குணரத்னவுக்கு சிறிதும் தெரியவில்லை. இதையடுத்து, நந்திக்கடல் பகுதியின் சேறு நிறைந்த உவர் நீரில் கடுமையான சண்டை வெடித்ததாக இளநிலை அதிகாரி ஒருவர் அவரிடம் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளை சேர்ந்த பலரும் அங்கே சிக்கியிருந்தனர். அவர்களுள் யாரும் ஆயுதத்தைக் கைவிட தயாராக இல்லை.
இறுதியில் சண்டை முடிந்து ஒரு மணிநேரம் கழித்து, தான் காத்திருந்த செய்தி குணரத்னவுக்கு கிடைத்தது.
தன்னுடைய ‘தி கேஜ், தி ஃபைட் ஃபார் ஸ்ரீ லங்கா அண்ட் தி லாஸ்ட் டேஸ் ஆஃப் தமிழ் டைகர்ஸ்’ (The Cage, The Fight for Sri Lanka and the Last Days of the Tamil Tigers) எனும் தன் புத்தகத்தில் கார்டன் வெய்ஸ், “கர்னல் ரவிப்ரியா மேஜர் ஜெனரல் குணரத்னவிடம், ‘சார், நாங்கள் பிரபாகரனை கொலை செய்துவிட்டோம்’. என கூறினார்,” என எழுதியுள்ளார்.
ஆச்சர்யமடைந்த குணரத்ன, ‘உறுதியாக கூறுகிறீர்களா’ என கேட்டதற்கு, ‘ஆமாம், உறுதியாக,’ என பதிலளித்துள்ளார்.
ஆனால், குணரத்ன இதனை உறுதியாக அறிய விரும்பியதால், கர்னல் லலிந்த கமகேவை சம்பவ இடத்துக்கு அனுப்பினார். சில நிமிடங்களிலேயே கமகேயின் குரல் ராணுவ தொலைபேசியில் ஒலித்தது: ‘சார், அது சரியான செய்திதான், பிரபாகரன் தான்.’ என தெரிவித்தார்.
பிரபாகரனின் உடல் கண்டறியப்பட்டது
ஜெனரல் சரத் ஃபொன்சேகா
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜெனரல் சரத் பொன்சேகா
முற்றிலும் உறுதிப்படுத்திய பின் குணரத்ன இந்த செய்தியை ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அனுப்பினார். அதற்கு முன்பு, பிரபாகரனின் உடலை கொண்டு வருமாறு படையினரை கேட்டுக்கொண்டார்.
எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், “அந்த சமயத்தில் இலங்கை படையினர் சுமார் மூவாயிரம் பேர் பிரபாகரனின் உடல் கிடத்தப்பட்டிருந்த இடத்தில் திரண்டிருந்தனர். சேறு நிறைந்த ஆழமற்ற நீரில் இறங்கி படையினர் உடலை வெளியே எடுத்தனர்.” என குறிப்பிட்டுள்ளா.
“பிரபாகரனின் உடலை படையினர் பார்த்த உடனேயே, அவர்கள் வானத்தை நோக்கி சுட ஆரம்பித்தனர். படையினரை ஒருங்குபடுத்த அதிகாரி முயற்சி மேற்கொண்டார், ஆனால் அவரின் வார்த்தைகளுக்கு பயனில்லாமல் போனது.”
ஜெனரல் பொன்சேகா இந்த செய்தியை அறிந்தபோது இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்தார். பொன்சேகாவிடம் குணரத்ன சிங்கள மொழியில் தொலைபேசியில், ‘மஹா எஸ் இவராய்’ என்றார், அதாவது, ‘பெரியவன் முடிந்து விட்டான்’.
அடையாள அட்டை
பிரபாகரனின் அடையாள அட்டை
பிரபாகரன் சுமார் 9.15 மணியளவில் இறந்தார். அவருக்கு அப்போது வயது 54.
எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், “அவருடைய நெற்றியில் பெரிய காயம் இருந்தது, இதனால் அவருடைய தலை இரண்டு பாகங்களாக பிளவுபட்டிருந்தது. அவருடைய வாய் திறந்திருந்தது, அவருடைய கண் மேல் நோக்கி இருந்தது. அவருடைய தாடி வெள்ளை நிறத்தில் இருந்தது.” என எழுதியுள்ளார்.
“குணரத்ன அவருடைய உடலை தொட்ட போது, அது இன்னும் சூடாக இருந்தது. அவருடைய நெற்றி தவிர வேறெங்கும் துப்பாக்கி குண்டு காயம் இல்லை. பிரபாகரன் அப்போது ராணுவ உடையில் இருந்தார். அவருடைய பாக்கெட்டில் தேடியபோது, 001 எனும் வரிசை எண்ணுடன் விடுதலைப் புலிகளின் அடையாள அட்டை கண்டறியப்பட்டது, அந்த அடையாள அட்டை ஜனவரி 1, 2007 அன்று வழங்கப்பட்டது.”
இதுதவிர, நீரிழிவு மருந்துகள் சிலவும் கண்டறியப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து வாங்கப்பட்ட திராட்சை மணத்துடன் கூடிய லோஷனும் (hand lotion) இருந்தது. அவரின் தலையில் இருந்த காயம் நீல நிற துணியால் மூடப்பட்டிருந்தது.
கார்டன் வெய்ஸ் எழுதுகையில், “12.7 எம்எம் தோட்டாவால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.” என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ராணுவத்தின் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரனின் ராணுவ உடையை கழற்றுமாறு உத்தரவிட்டார். இலங்கை படையினரை தவிர, ராணுவ உடையணிய யாருக்கும் உரிமை இல்லை என்பது அவரின் வாதமாக இருந்தது.
பிரபாகரனின் உடல் அடையாளம் காணப்பட்டது
நாராயண் சுவாமி எழுதுகையில், “பிரபாகரனின் உடலை அடையாளம் காண கர்னல் கருணா மற்றும் தயா மாஸ்டர் எனும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களை அனுப்புவதாக பொன்சேகா குணரத்னேவிடம் தெரிவித்தார்.” என குறிப்பிட்டுள்ளார்.
“இருவரும் ராணுவ விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அந்த உயிரற்ற உடலை அடையாளம் காண அவர்கள் ஒரு நொடி கூட எடுத்துக்கொள்ளவில்லை.”
பிரபாகரனின் மரணத்தால் தமிழ் ஈழத்துக்கான ஆயுத போராட்டமும் இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தன.