ஹம்பாந்தோட்ட, திஸ்ஸமஹாராம பகுதியில் தனது நண்பரை போத்தலால் அடித்துக் கொலை செய்து நீரில் மூழ்கடித்த நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவராகும்.

திஸ்ஸமஹாராம பிரதேசத்தின் சந்துங்கம பிரதேசத்தில் கால்வாயில் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவராகும். சந்தேக நபர் உயிரிழந்தவரின் நண்பர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply