வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று காலை தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 62 வயதுடைய பெண்ணின் சடலத்தை பொலிஸ் மீட்டுள்ளனர்.
இறந்த பெண் கண்ணன் மணிராணி என அடையாளம் காணப்பட்டதாக வட்டவளை பொலிஸ் தலைமைஆய்வாளர் சந்தன கமகே தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் தனது சேலையுடன் மரத்தில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்ததை அடுத்து, சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க வட்டவளை பொலிஸார், ஹட்டன் பொலிஸ் பிரிவு புலனாய்வுக் குழுவுடன் இணைந்து விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.