கனடாவில் நாடு தழுவிய அடிப்படையிலான பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பெண் ஓருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அல்பெர்டாவின் ஃபோர்ட் மெக்மரே பகுதியில் 2023 டிசம்பரில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய 29 வயது பெண் ஒருவருக்கு இவ்வாறு நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனடிய பொலிஸார் இது தொடர்பிலான தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

42 வயதான மார்க் ஓ’கீஃப் என்ற நபரை படுகொலை செய்ததாக இந்தப் பணெ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விக்டோரியா ஷீலா எலிசபெத் ஹில்லார்டு என்ற மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஹில்லார்ட் தொடர்பில் பொலிஸார் சில குறிப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

வெள்ளை நிறத் தோல், நீலக் கண்கள், அடிக்கடி முடி நிறத்தை மாற்றுபவர் (தற்போது தங்க நிறம்), உயரம் – 5 அடி 7 அங்குலம், எடை – சுமார் 139 பவுண்டு, இடது கைமணியில் மர்மெய்ட் டாட்டூ, இடது கை முன்னங்காலில் பட்டாம்பூச்சி டாட்டூ, மேல் முன்னங்காலில் ட்ரிபிள் மூன் டாட்டூ இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹில்லார்டு டொராண்டோ பெரும்பாக பகுதியில் இருக்கக்கூடும் எனவும் அவரை அணுக வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்த பெண் தொடர்பிலான தகவல்கள் இருந்தால் பொலிஸாருக்கு உடன் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply