ஆண் ஒருவரும் இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபர் பொரள்ளையில் வசிக்கும் 69 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் 26 மற்றும் 68 வயதுடையவர்கள், கோனகனார மற்றும் பொரள்ளையில் வசிக்கும் பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 3,831,000 மற்றும் 3,436,000 ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சந்தேக நபர்கள் இதுபோன்ற வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

