அமெரிக்காவில் பாலியல் குற்றவாளியை தேடி சென்று திட்டமிட்டு ஒரு இந்தி வம்சாவளி நபர் கொலை செய்துள்ளார். இச்சம்பவத்தின் முழு விவரம் இதோ…

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், பாலியல் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட நபரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொலையாளியின் பெயர் வருண் சுரேஷ் (29) என்றும் கொலை செய்யப்பட்டவரின் பெயர் டேவிட் பிரிம்மர் (71) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. பொது பாலியல் குற்றவாளியின் பதிவேட்டில் டேவிட் பிரிம்மர் பட்டியலிடப்பட்டிருந்ததை தொடர்ந்து, வருண் அவரை கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட நபர் ஃப்ரீமாண்ட் நகரைச் சேர்ந்தவர், அங்குதான் கொலையும் நடந்துள்ளது. அமெரிக்காவில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யப்பட்டவர் யார்?

பிரிம்மர் கொலை செய்யப்பட்ட தகவல் போலீசாருக்கு உடனே தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அழர்கள் சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரிம்மர் ஒரு சிறுவரை பாலியல் ரீதியாக அத்துமீறிய குற்றத்திற்காக 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவதித்துள்ளார்.

இவரின் பெயர் கலிபோர்னியாவின் மேகன் சட்ட இணையத்தளத்தில் பாலியல் குற்றவாளி என்ற பிரிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிர்ச்சி வாக்குமூலம்

கொலை செய்த வருண் சுரேஷ் மீது கடந்த திங்கட்கிழமை கொலை வழக்கு பதிவாகி உள்ளது. விசாரணையில் கொலைக்கான காரணத்தை போலீசார் கேட்கையில், “பாலியல் குற்றவாளிகள் அனைவரும் இறக்க வேண்டிய நபர்கள். நீண்ட நாளாக அப்படி ஒருவரை கொலை செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன்” என அவர் வாக்குமூலம் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேஷம் போட்ட வருண்

அந்த இணையதளத்தில் பாலியல் குற்றவாளி என பிரிம்மர் குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்த வருண் சுரேஷ், தன்னை ஒரு பொது கணக்காளர் என அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார்.

மேலும், பிரிம்மரின் வீட்டை கண்டுபிடிக்க வீடாக வீடாக ஏறி இறங்கி, தன்னை பொது கணக்காளர் என அறிமுகப்படுத்தியிருக்கிறார். மேலும், கையில் நோட்புக், காபி, பை உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு உண்மையாகவே கணக்காளர் போல் தோற்றமளித்துள்ளார்.

நடித்த வருண் சுரேஷ்

வருண் சுரேஷ், பிரிம்மரின் வீட்டை கண்டுபிடித்த பின்னரும் கூட, தன் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக முதலில் அவரது பக்கத்துவீட்டுக்குச்சென்று அங்கையும் பொது கணக்காளராக நடித்துள்ளார்.

தொடர்ந்து, பிரிம்மர் வீட்டை அடைந்து அவரை பார்த்ததும், அவருடன் கைக்குழுக்கி உள்ளார். தொடர்ந்து, “நான் சரியான நபரை கண்டுபிடித்துவிட்டேன் என எனக்கு தெரியும்” என சொல்லிவிட்டு கையில் கத்தியுடன் பிரிம்மரை சுரேஷ் துரத்தி உள்ளார்.

பிரிம்மர் தப்பித்து ஓடும்போது, பக்கத்து வீட்டின் அருகே அவரை பிடித்த சுரேஷ் கழுத்திலேயே குத்தி உள்ளார். பிரிம்மர் காயத்தால் துடித்துக்கொண்டிருந்தபோது, மனந்திருந்து என சொல்லியிருக்கிறார். அப்போது பிரிம்மர் தவழ்ந்து செல்ல முயற்சிக்கையில் அவரது கழுத்தை சுரேஷ் அறுத்துள்ளார்.

நானே போலீஸை கூப்பிட்டிருப்பேன்

பிரிம்மரை கொலை செய்த பின் சுரேஷ் எவ்விதமான குற்றவுணர்ச்சியும் கொள்ளவில்லை என்றும் பிரிம்மரை கொன்றது உண்மையாகவே நன்றாக இருந்தது என சொல்லியிருக்கிறார்.

மேலும் போலீஸ் விசாரணையில், ‘பிரிம்மர் சிறுவரை பாலியல் ரீதியாக அத்துமீறிய நபர் என்பதால், எல்லோரும் குழந்தைக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தை விரும்புவதில்லை.

அது அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். சொர்க்கம் அவர்களை ஏற்றுக்கொள்ளுமா என்பதை முடிவு செய்வது உங்கள் கடமை அல்ல, அவர்களை அதன் வாயில்களுக்கு அனுப்புவது உங்கள் கடமை” என வருண் சுரேஷ் சொன்னதாக கூறப்படுகிறது.

மேலும் கொலைக்கு பிறகு தானே போலீசாரை அழைத்திருப்பேன் என்றும் தனக்கு தப்பிக்கத் திட்டமிடவில்லை என்றும் சுரேஷ் தெரிவித்துள்ளார். கொலைக்குப் பிறகு காவல்துறையை அழைத்திருப்பேன் என்றும், தப்பிக்கத் திட்டமிடவில்லை என்றும் சுரேஷ் ஒப்புக்கொண்டார்.
2021இல் நடந்த வேறு சம்பவம்

கடந்த 2021ஆம் ஆண்டில், அதே ஃப்ரீமாண்டில் உள்ள சொகுசு ஹோட்டலில் ஒரு பையை விட்டுச் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து போலி வெடிகுண்டு மிரட்டல், குற்றவியல் மிரட்டல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்காக சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

அப்போது சுரேஷ் அந்த சம்பவம் குறித்து கூறுகையில், அந்த ஹோட்டலின் தலைமை நிர்வாக அதிகாரியை வேட்டையாட இருந்ததாக அவர் போலீசாரிடம் கூறினார், ஏனெனில், அந்த சிஇஓ ஒரு குழந்தையை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்பவர் என்றும் அவரைக் கொல்ல விரும்புகிறேன் என்றும் அவர் அப்போதே கூறியிருக்கிறார்.

 

Share.
Leave A Reply