புத்தளம்-கொழும்பு வீதியில் செம்பெட்ட பகுதியில் நடந்த விபத்தில் பொலிஸ் சார்ஜன் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் திசை நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 55 வயதான பொலிஸ் சார்ஜென்ட் என்பதுடன், இவர் புத்தளம், சாலிய வெவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.