தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிவர்தன வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (29) இரவு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர், தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.