19 ஆவது நாளாக முத்து நகர் விவசாயிகளின் சத்தியாக் கிரகப் போராட்டம் தொடர்கிறது, பிரதமரின் 10 நாட்கள் வாக்குறுதிக்கும் தீர்வில்லை என்கின்றனர் திருகோணமலை முத்து நகர் விவசாயிகள்.

குறித்த விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்காக தொடர்ந்தும் 19 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (05) சத்தியாக் கிரகப் போராட்டத்தில் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பு போராடி வருகின்றனர்.

தங்களது விவசாய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்திக்காக தாரைவார்க்கப்பட்டதையடுத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் அண்மையில் பிரதமர் அலுவலகம் முன் இடம் பெற்ற போராட்டத்தில் பிரதமருடனான சந்திப்பில் பத்து நாட்களுக்குல் தீர்வு தருவதாக கூறி பத்து நாட்கள் கடந்துள்ள போதிலும் எவ் வித பதிலும் இல்லை எனவும் இன்னும் இம் மாதம் 20ம் திகதி வரை காலக்கெடு வழங்குமாறும் பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாக முத்து நகர் ஒன்றினைந்த  விவசாய சம்மைளனத்தினர் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply