இலங்கையின் சராசரி தேங்காய் விலை 6.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை ஒரு 138,582 ரூபாயாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச விலை குறிப்பிடப்படவில்லை.

அதேவேளை , உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 180 முதல் 190 ரூபாயாகவும், சிறிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 150 முதல் 170 ரூபாயாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply