நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) பூநகரி மற்றும் ஹுங்கம பகுதிகளில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பூநகரி பகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பூநகரி பொலிஸ் பிரிவில் பரந்தன் பூநகரி பிரதான வீதியில் 20வது கிலோமீட்டர்  மைல்கல் அருகே வீதியில் பயணித்த ஒருவர் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பின்னர் , விபத்தில் சிக்கிய நபர் உயிரிழந்துள்ளதோடு, விபத்துக்கு காரணமான வாகனம் நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதியை கைது செய்ய பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஹுங்கம பொலிஸ் பிரிவில் திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியில் ஹங்கமவிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் இருந்து வந்த ஒரு கெப் ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர், கெப் ரக வாகன ஓட்டுநர் மற்றும் கெப் ரக வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்து ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது,முச்சக்கர வண்டி ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ரன்ன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Share.
Leave A Reply