வலப்பனை – தெரிபஹ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தப்பரே பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் தப்பரே, நில்தண்டாஹின்ன பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க பொருத்திய அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பியில் சிக்கியதால் உயிரிழந்துள்ளதாக  ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply