த சொய்சா மகப்பேற்று மருத்துவ மனையின் 4 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள  அதிதீவிர சிகிச்சை பிரிவு வியாழக்கிழமை (16) பொதுமக்கள் பாவனைக்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஸ்தாபிக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும், வெகு விரைவில் கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவுகளை  நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

த சொய்சா மகப்பேற்று மருத்துவமனையில்  4 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப்பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய இந்த அதிதீவிர சிகிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்காக 249 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் உரையாற்றுகையில்,

இந்த நாட்டின் சுகாதார அமைப்பில் 150 வருடகால சேவையை வழங்கி வரும் சிறப்புக்குறிய மகப்பேற்று மருத்துவ மனையாக த சொய்சா மகப்பேற்று மருத்துவமனை உள்ளது.  த சொய்சா மகப்பேற்று மருத்துவமனையில் நீண்டகாலமாக குறைபாடாக இருந்த அதிதீவிர சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளர் தங்கும் அறை தற்போது  பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஆண்டு தோரும் 3 தொடக்கம் 5 வீதிமான பிரசவங்கள்  த சொய்சா மகப்பேற்று  மருத்துவமனையில் நிகழ்கின்றன. இலங்கையில் உள்ள மப்பேற்று மருத்துவமனை ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஸ்தாபிக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும், வெகு விரைவில் கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவுகளை  நிறுவுவதற்கு எதிர் பார்க்கப்பட்டுள்ளது.  அனைத்து வசதிகளுடனும் 4 நோயாளர் தங்கும் அறைகளை உள்ளடக்கிய வகையில் அவை நிர்மானிக்கப்படும்.

மீதமுள்ள இரு மாடிக்கட்டடங்களின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் அளவில் நிறைவடைய உள்ளதுடன், மேலும் இரு மாடிகளை கொண்ட புதிய கட்டிடம் ஒன்றும் த சொய்சா மகப்பேற்று மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட உள்ளது என்றார்.

Share.
Leave A Reply