இங்கிலாந்து சவுத்தாம்ப்டனில் 37 வயதான இலங்கைத் தமிழர் ஒருவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வதாக  தகவ்ல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக  நுழைந்தமை மற்றும் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் என்பன தொடர்பில்   குறித்த இலங்கைத் தமிழர் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.

குடிவரவு குற்றம், அநாகரீகமான வெளிப்பாடு மற்றும் பொது ஒழுங்கு உள்ளிட்ட குற்றங்களுக்காக 37 வயதான அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நீதிமன்றில் முன்னிலையான அவர், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்தார்.

இதனையடுத்து விசாரணையை 2026 மார்ச் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, விசாரணைக்கு முந்திய முன்விளக்க மாநாட்டு விசாரணையை 2025 டிசம்பர் 15 அன்று நடத்தவும்  உத்தரவிட்டதாக  கூறப்படுகின்றது.

Share.
Leave A Reply