சந்தேகநபர் நான்கு நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் தனது சட்டதரணி மூலம் பொத்தல பொலிஸாரிடம் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் சந்தேகநபர் காலி தலைமை நீதவான் சமீர தொடம்கொட முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் 24 ஆம் திகதி நடந்துள்ளது. தற்போது சந்தேகநபர் பத்தேகம பிரதேச சபையின் பிரதித் தலைவர் சமன் சி.லியனகேவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த லியனகே, காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பொத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

