எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அலப்பறை செய்து விட்டு கடைசியில் ஸாரி கேட்டு விட்டு ஓய்வெடுக்கச் செல்வது பாருவின் வழக்கம்.
வெட்டி வைத்த வெங்காயம் முதற்கொண்டு அனைத்து உணவுப் பொருட்களையும் பிக் பாஸ் பிடுங்கிக் கொண்டு விட்டார். கஞ்சி காய்ச்சி குடிக்க வேண்டிய நிலைமை.
நாமாக இருந்தால் சோர்வில் அப்படியே சாய்ந்து விடுவோம். ஆனால் இந்த வீட்டில் ஹை – எனர்ஜியுடன் சண்டை போடுகிறார்கள். அதிலும் காமிராக்களுக்கு ஓவர் டைம் கொடுப்பது போல நாள் பூராவும் மூச்சு விடாமல் கத்திக் கொண்டிருக்கும் பாருவின் எனர்ஜி இருக்கிறதே?
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 23
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 Bigg Boss SO9 | EP – 23 | 28/10/2025
‘ஓயாதே.. போராடு’ என்கிற மோட்டிவேஷன் பாடல் காலையில் ஒலித்தது. சோறு இல்லையென்றாலும் ரீல்ஸ் மோகம் திவாகருக்கு குறையவில்லை.
BB Tamil 9 Day 22: அலப்பறையை ஸ்டார்ட் செய்த பாரு; நாமினேஷன் தியாகம் செய்த பிரவீன்

இந்த வாரம் பிக் பாஸ் வீடு ராணுவக் கட்டுப்பாடோடு இருக்குமோ என்று ஒரு கணம் தோன்றி விட்டது. ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்த நினைப்பைக் கலைத்து சாதனை ஏற்படுத்தினார் பாரு.
பாரு, கம்ருதீன் போன்ற நபர்கள் இல்லையென்றால் இந்த சீசனில் கன்டென்ட் கிடைக்காது என்பது உண்மை. அது வணிகக் காரணம். ஆனால் தார்மீகமான நோக்கில் பார்த்தால் இப்படிப்பட்ட அடாவடியான நபர்கள் ஒரு சமூகத்திற்கு மிக மிக மோசமான முன்னுதாரணமாக இருப்பார்கள்.
இவர்கள்தான் அதிக கவனம் பெறுவார்கள் என்றால் ‘நாமும் அடாவடியாக மாறினால் என்ன?’ என்று ஒரு நல்லவனுக்கும் தோன்றிவிடும். இந்த அடாவடி நபர்கள் சூழலை அப்படியாக மாற்றி நாசப்படுத்திவிடுவார்கள்.
“ஒரு நல்லவனுக்குக் கிடைக்கவேண்டிய அத்தனை மரியாதையும் ஒரு கெட்டவனுக்கு தட்டுல தூக்கி வெச்சு கொடுக்கறாங்க” என்கிற மகாநதி வசனம்தான் நினைவிற்கு வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 22
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 Bigg Boss SO9 | EP – 22 | 27/10/2025

