பாணந்துறை, ஹிரண மாலமுல்ல பகுதியில் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்தார்.

பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

அதற்கமைய, இந்தக் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிதாரிக்கு தங்குமிடம் வழங்கி தப்பிச்செல்ல உதவியதாக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, ஹிரன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பாணந்துறை, மொரவின்ன பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஹிரணபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply