வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களை நாட்டுக்கு கொண்டு வந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “216 பேருக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர். சுமார் 82 பேரே பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையவர்கள்.

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்களில் 17 பேர் இதுவரையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்களில் அதிகளவானோர் டுபாயிலேயே இருக்கின்றனர். சிலர் வெளிநாட்டு சிறைகளில் உள்ளனர். இவர்களைக் கொண்டு வருவதற்குரிய இராஜதந்திர நடவடிக்கையும் இடம்பெறுகின்றது.

இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்பட்டது போல் எதிர்காலத்தில் நடவடிக்கைகள் இடம்பெறும்.

இந்த நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு விட்டு வெளிநாடுகளில் பதுங்கி வாழ்வதற்கு இடமளிக்கமாட்டோம். அவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இதற்கு நீதி அமைச்சின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்று வருகின்றது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply