Problem Between Napoleon And Vijay : தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக இருந்தவர், நெப்போலியன். இவருக்கும் விஜய்க்குமிடையே சண்டை என்பது பலருக்கும் தெரியும். ஆனால் என்ன சண்டை என்பது யாருக்காவது தெரியுமா? இதோ அது குறித்த முழு விவரம்.

Problem Between Napoleon And Vijay : முன்னர் ஹீரோவாக நடித்து வந்த நெப்போலியன், ஒரு கட்டத்தில் வில்லன் நடிகராகவும், பின்னர் குணச்சித்திர நடிகராகவும் மாறினார்.

அப்படி, அவர் முக்கியமான கேரக்டரில் நடித்த படங்களுள் ஒன்று, ‘போக்கிரி’. இந்த படத்தில் நடிக்கும் போதுதான், அவருக்கும் ஹீரோவாக நடித்த விஜய்க்கும் பிரச்சனை எழுந்துள்ளது. அந்த பிரச்சனை என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

நெப்பாேலியன்-விஜய் பிரச்சனை:

நெப்போலியன், கடந்த சில ஆண்டுகளில் விஜய்யை அவ்வப்பாேது ஊடகங்களில் தாக்கி பேசி வந்ததை பார்க்க முடிந்தது.

இதைத்தாண்டி, விஜய் அரசியலில் நுழைந்த பின்பு, திமுகவின் தீவிர பின்தொடர்பாளரான நெப்போலியன் அவருக்கு எதிராக பல கருத்துகளை பேசி வந்தார். அதைத்தாண்டி, சமீபத்தில் நடந்த கரூர் சம்பவத்திலும் விஜய்யை தாக்கி பேசினார்.

இதையெல்லாம் கவனித்த மக்கள், அப்படி விஜய்க்கும் நெப்போலியனுக்கும் என்னதான் சண்டை என்று கேட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சனை, ‘போக்கரி’ பட சமயத்தில் எழுந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் என்ன பிரச்சனை என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. இது குறித்து, பிரபல சினிமா செய்தியாளர் பிஸ்மி பேசியிருக்கிறார்.

பிஸ்மி சொன்ன விஷயம்:

“நைட் 2 மணிக்கு ஏவிஎம்-ல் இந்த சம்பவம் நடந்தது. போக்கிரி படத்தில் நடித்த போது, நெப்போலியனின் நண்பர் ஒருவர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருந்தார்.

அவர், விஜய்யை பார்க்க விரும்பினார், விஜய் அந்த சமயத்தில் அவரது காட்சியை முடித்து விட்டு கேரவனுக்குள் இருந்தார். அவரது உதவியாளர்கள் வெளியில் நின்று கொண்டிருந்தனர்.

நெப்போலியன் தன் நண்பரை அழைத்துக்கொண்டு விஜய்யின் கேரவனை திறக்க முற்பட்டார். அப்போது அருகில் இருந்த உதவியாளர், ‘விஜய் சாரே உடை மாற்றிக்கொண்டு வெளியில் வருவார். அதுவரை திறக்காதீர்கள், காத்திருங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

இதில் கோபப்பட்ட நெப்போலியன் அவரை ஒருமையில் பேசியிருக்கிறார். பயங்கரமாக கத்தி பேசியதில் விஜய் என்னவோ ஏதோ என பதறி கதவை திறந்தார். அப்போது விஜய்யிடம் முறையிட்ட நெப்போலியன்,

‘உங்க அசிஸ்டெண்ட் என்னை உள்ளே விட மாட்டேன் என்கிறார்’ என்று கேட்டிருக்கிறார். அப்போது உதவியாளரிடம் என்ன நடந்தது என விஜய் கேட்டு தெரிந்து கொள்கிறார்.

‘சார், நீங்கள் எப்படி அவனை திட்டலாம். அவன் நான் சொல்லிதான் இந்த வேலையை செய்கிறான். எதுவாக இருந்தாலும் நீங்கள் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும், இவரை ஏன் திட்டினீர்கள்’ என்று நெப்போலியனிடம் விஜய் கேட்டிருக்கிறார்.

இதை, ஷூட்டிங்கிற்கு வந்திருந்து அனைவரும் பார்த்துள்ளார்கள். இத்தனை பேர் முன்னிலையில், தன்னை விஜய் இப்படி திட்டிவிட்டாரே என்று நினைத்த நெப்போலியன், அன்று முதல் அவருடன் நடிப்பதை நிறுத்திவிட்டார்” என பிஸ்பி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிரு்கிறார்.

Share.
Leave A Reply