யாழில் தொடரும் கைது நடவடிக்கைகள்

யாழ்ப்பாணத்தின் தொடர்ச்சியாக போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கைகள் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று (04.11.2025) யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்

அந்தவகையில், யாழ்.குருநகர் பகுதியில் நேற்று மாலை 24, 26, 28 வயதுகளையுடைய. இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடமிருந்து 30 மில்லிகிராம் கெரோயின் 1000 மில்லி கிராம் கஞ்சா 05 போதை மாத்திரைகள் என்பன பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை கொடிகாமம் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 3 கிராம் 800 மில்லி கிராம் கெரோயின் தனது உடமையில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரணி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply