இலங்கயை சுனாமி தாக்கினால் ஏற்படக்கூடிய ஆபத்து
இலங்கையில் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் ஆணையாளர் நாயகம் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுனாமி முன்னெச்சரிக்கை தொடர்பில் கண்டறிந்து கொள்வதற்காக 77 கோபுரங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவை அனைத்தும் தற்பொழுது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்றைய தினம் நாடு முழுவதிலும் குறிப்பாக கரையோர மாவட்டங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்த சுனாமியை முன்னெச்சரிக்கை கோபுரங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் செயலிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்மதி சமிக்ஞைகள் தொடர்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இந்த முன்னெச்சரிக்க கோபுரங்கள் செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் மட்டும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து சர்வதேச நிறுவனங்கள் ஊடாக இந்த தொழில்நுட்பக் கோளாறை சரி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் சுனாமியை கண்டறிந்து கொள்வதற்கான ஒரு முறை மட்டுமே எனவும் இவ்வாறான பதினைந்து முன்னெச்சரிக்கை முறைமைகள் காணப்படுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
ஒரே முறையில் தங்கி இருக்க முடியாது எனவும் பல்வேறு முறைகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் ஊடாக ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே முன்னெச்சரிக்கை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் முன்னெச்சரிக்கை கோபுரங்களை பழுது பார்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கரையோர மாவட்டங்களான மட்டக்களப்பு யாழ்ப்பாணம், காலி களுத்துறை போன்ற பகுதிகளில் இன்றைய தினம் இந்த சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி முன் எடுக்கப்பட உள்ளது

