இந்தியாவின் புது டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை புறப்படும் நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதமாகியுள்ளன.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே தாமதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

இதன் விளைவாக, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரபரப்பான விமான நிலையம்

தற்போது இந்த பிரச்சினையை தீர்க்க விமான நிலைய அதிகாரிகள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

இந்தியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக கருதப்படும் புது டில்லி விமான நிலையம், ஒரு நாளைக்கு 1,500க்கும் மேற்பட்ட விமானங்களை கையாளுகின்றது.

கடந்த ஒரு வாரமாக விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அமைப்பு பல சந்தர்ப்பங்களில் சிக்கல்களை சந்தித்துள்ளது.

Share.
Leave A Reply