2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இலங்கைக்கு வந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, 160,000 இற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். இதுவொரு ஒரு சாதனை ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 3 மில்லியன் வெளிநாட்டவர்கள் இலங்கை வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் விமான டிக்கட் விற்பனை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா

இந்நிலையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை மிகவும் இலாபகரமான சந்தையாக உள்ளதாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய மேலாளர் சிந்தக வீரசிங்க தெரிவித்துள்ளார்

குளிர்காலத்தில் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய, விமான நிறுவனம் வார இறுதி நாட்களில் லண்டன் ஹீத்ரோவில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகளை நாளாந்தம் இரண்டாக அதிகரித்துள்ளது.

மேலும் வாரத்திற்கு 14 விமானங்களைச் சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. அதற்கமைய, லண்டன் கேட்விக் மற்றும் லண்டன் ஸ்டான்ஸ்டெட்டில் இருந்து சேவைகளை இணைக்க வாய்ப்புகள் உள்ளது.

வசந்த காலத்திலும் கோடையின் தொடக்கத்திலும், அதாவது தென்மேற்கு கடற்கரையில் பருவமழை காலமாக கருதப்படும் காலத்திலும், பிரித்தானியாவில் அதிக விமான டிக்கெட்டுகளை விமான நிறுவனம் விற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Share.
Leave A Reply