மதவாச்சி, ஏ9 வீதியில் நேற்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறி ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணை

உயிரிழந்தவர் பதவிய போகஸ் சந்தி பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்.

குறித்த பெண், உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக முச்சக்கர வண்டியில் மாவனெல்லவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்தை சந்தித்துள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில் அவரது கணவரும் மகளும் முச்சக்கர வண்டியில் இருந்தனர், அவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டன.

லொறி சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. லொறியின் சாரதி மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share.
Leave A Reply