கொழும்பு, பம்பலப்பிட்டி இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தீவிரம் அடைந்த நிலையில் கோபமடைந்த குழுவொன்று விடுதிக்கு தீ வைத்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை 1.00 மணியளவில், டூப்ளிகேஷன் வீதியில் உள்ள இரவு விடுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

அங்கு வந்தவர்களுக்கு இடையில் வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளனர். பின்னர் சுமார் 15 பேர் கொண்ட குழு ஒன்று இரவு விடுதிக்கு தீ வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குழுக்களுக்கு இடையில் மோதல்

கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர்.

தீயை அணைக்க தீயணைப்பு பிரிவினர் விடுதியில் உள்ள பல ஜன்னல்களை அகற்றியுள்ளனர்.

பம்பலப்பிட்டி பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share.
Leave A Reply