அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.

சீண்டப்படும் அமெரிக்கா

தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் வடகொரியா பல முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வடகொரியாவின் வடமேற்கே சீனா எல்லையில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தென்கொரியா, ஜப்பான் கடற்பரப்பு அருகே கடலில் விழுந்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனையால் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. அதேவேளை, வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Share.
Leave A Reply