அருள்நிதி

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. வம்சம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி, டிமாண்டி காலனி, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆறாது சினம் போன்ற நல்ல படங்களில் நடித்து வந்தார்.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி 2 சூப்பர்ஹிட்டானது. மேலும் தற்போது டிமாண்டி காலனி 3 படத்தில் நடித்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் நடிகர் அருள்நிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரரின் மகனான அருள்நிதியை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Share.
Leave A Reply