திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம் பவம் யாழ்.தெல்லிப்பளை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
நண்பகல் 12.30 மணியள வில் வீட்டிலிருந்த மேற்படி குடும்பஸ்தர் மயங்கி விழுந்த நிலையில், தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும் அவர் ஏற்க னவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் மருதனார் ம டத்தை சேர்ந்த கடற்றொழில் பரிசோதக ரான தருமசீலன் கணேஸ்வரன்
(வயது47) என அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசா ரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

