கிரிந்த கடற்கரையில் கப்பலொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலுக்கமைய, மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால், முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய நேற்று புதன்கிழமை (12) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சுமார் 394 மில்லியன் ரூபாய்

அவர்களிடமிருந்து, 329 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய, 06 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைக்காக, சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள்தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 394 மில்லியன் ரூபாய் என  மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெறுவதற்காக திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

 

Share.
Leave A Reply