கொஹூவல பல்பொருள் அங்காடியிலிருந்து பணம் செலுத்தாமல் பொருட்களை கொண்டு சென்ற பெண் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஹூவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றும் பெண் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பணம் செலுத்தாமல்  சென்ற  பெண் சிப்பாய்

இறைச்சி விற்பனை பிரிவின் மீதமுள்ள இருப்புகளில் ஏற்பட்ட சில பற்றாக்குறை காரணமாக, கடந்த 1 ஆம் திகதி இரவு சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தபோது, ​​ஒரு பெண் இறைச்சி விற்பனைப் பிரிவில் இருந்து பணம் செலுத்தாமல் இறைச்சி பார்சலை எடுத்துச் செல்வதை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்காடியின் நிர்வாகம் பெண்ணின் தோற்றத்தைக் கவனித்துள்ளனர். இந்நிலையில் சந்தேக நபரான பெண் நேற்றைய தினமும் (16) பணம் செலுத்தாமல் பொருட்களை வெளியே எடுத்துச் சென்றுள்ளார்.

இதன்போது நிறுவனத்தின் ஊழியர்களால் பிடிக்கப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ரத்மலானை, கல்தா முல்லாவைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply