‘தன்மத்ரா’ படத்தின் மூலம் மலையாள திரைப்பட ரசிகர்களிடம் தனித்த இடத்தை பிடித்த நடிகை மீரா வாசுதேவன், தனது மூன்றாவது திருமணத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்ததாக அறிவித்துள்ளார்.

முதல் திருமணம் 2005ஆம் ஆண்டு விஷால் அகர்வாலுடன் நடைபெற்றது; ஆனால் 2008ஆம் ஆண்டில் விவாகரத்துடன் முடிவடைந்தது. பின்னர் 2012ஆம் ஆண்டு ஜான் கொக்கேனை திருமணம் செய்த அவர், 2016ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் பிரிந்தார்.

இறுதியாக, ‘குடும்ப விளக்கு’ சீரியலில் இணைந்து பணியாற்றிய விபினை திருமணம் செய்திருந்த மீரா, தற்போது அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்று சிங்கிள் லைஃபுக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சினிமா மற்றும் சீரியல் மூலம் பிஸியாக இருந்த நடிகை, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல மாற்றங்களை சந்தித்து வருவது ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகிறது.

Share.
Leave A Reply