சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட புதிய கணக்கெடுப்பின்படி, இலங்கையின் யானை எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 7,451 ஆக உயர்ந்துள்ளது. 1993 முதல் 2024 வரை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் இந்த வளர்ச்சி, நாட்டின் வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளுக்கான முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2021–2024 காலத்தில் மட்டும் 1,572 யானைகள் கூடுதல் பதிவாகியுள்ளன. தந்தயானைகளின் விகிதமும் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது. மனித–யானை மோதலை குறைக்கும் திட்டங்கள் மற்றும் வாழ்விடம் முகாமைத்துவத்திற்கு இந்த தரவுகள் வலுவான ஆதாரமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply