தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் பல்வேறு பாதைகளில் உள்ள தடைகள் காரணமாக, இலங்கைத் தொடருந்து திணைக்களம் இன்று (டிசம்பர் 01) திருத்தப்பட்ட தொடருந்து அட்டவணையை அறிவித்துள்ளது.

  • பிரதான பாதை :

    • பிரதான பாதையில் இன்று 19 தொடருந்து சேவைகள் இயங்கும்.

    • இருப்பினும், பாதைகளில் உள்ள தடைகள் காரணமாக, இந்தச் சேவைகள் கொழும்பு கோட்டைக்கும் அம்பேபுஸ்ஸவிற்கும் இடையில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டு இயங்கும்.

    • அத்துடன், அம்பேபுஸ்ஸவிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி 10 தொடருந்து சேவைகள் இயங்கவுள்ளன.

  • கரையோரப் பாதை :

    • கரையோரப் பாதையில் திட்டமிட்டபடி 34 தொடருந்து சேவைகள் வழக்கம் போல இயங்கும்.

  • புத்தளம் பாதை :

    • இந்தப் பாதையில் மொத்தம் 18 தொடருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளன.

    • இந்தச் சேவைகள் கொழும்பு கோட்டையிலிருந்து நீர்கொழும்பு கொச்சிக்கடை வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டு இயங்கும்.

  • களனிவெளி மார்க்கம் :

    • இந்த மார்க்கத்தில் 10 தொடருந்து சேவைகளை இயக்கத் தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்தத் திருத்தப்பட்ட அட்டவணை, பொதுமக்கள் தங்களது பயணங்களைத் திட்டமிட உதவியாக இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply