எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ் அரசாங்கத்தின் 1978 ஆண்டு பல்கலைக்கழகச் சட்டத்திற்கு செய்யப்படும் திருத்த நடவடிக்கையை ஜனநாயகமற்ற முறையில் மேற்கொண்டு வருவதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

சஜித் எச்சரிக்கை

  • பல்கலைக்கழக கல்வியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடன் ஆலோசனை இல்லாமல் இத்தகைய முக்கிய மாற்றங்களை செய்வது தவறானது.

  • பீடாதிபதிகள் மற்றும் துறைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பது போன்ற அதிகாரங்களை துணைவேந்தர் அல்லது ஆளும் சபைக்கு மையப்படுத்துவதால் உயர்கல்வித் துறையில் பதற்றம் உருவாகும்.

  • நாடாளுமன்ற அங்கீகாரத்திற்கு முன்னரே பீடாதிபதி நியமனத்தை நிறுத்துமாறு அனுப்பப்பட்ட துணைவேந்தர் கட்டளைக்கு சட்ட அடிப்படை இல்லாது, தற்போதுள்ள சட்டத்திற்கு முரணாகும்.

சஜித் வேண்டுகோள்

  • அரசாங்கம் இந்த திருத்த செயல்முறையை தற்காலிகமாக நிறுத்தி அதிகாரத்தை மையப்படுத்தாமல்,

  • அனைத்து பங்குதாரர்களின் பங்கேற்புடன் பரந்த ஆலோசனைகள் நடத்தி,

  • நியாயமான, ஆதாரப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply