யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் யுவதி ஒருவர் காசநோய் பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று பிற்பகல் அவருக்குத் திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

இன்று மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில், அவரது மரணம் காசநோய் பாதிப்பினால் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே யுவதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply