இந்த நோக்கில் பாருவை விடவும் ரோபோ முகத்துடன் இருக்கும் சான்ட்ராவைக் கையாள்வது சிரமம். பாருவை விடவும் இவர்கள் ஆபத்தானவர்கள் என்று தோன்றுகிறது.

‘டேமேஜ் கண்ட்ரோல்’ செய்கிறேன் பேர்வழி என்று மேலும் தன்னை எக்ஸ்போஸ் செய்து கொள்வதில் பாரு திறமைசாலியாக இருக்கிறார். இந்த எபிசோடில் நிகழ்ந்ததும் அதுவே.

பாரு வேலை செய்யாமல் டபாய்க்கிறார் என்பது ஐநா சபை வரைக்கும் தெரிந்த விஷயம். என்றாலும் அதை பூசி மெழுகி ஏன் இன்னமும் பெயரை கூடுதலாக கெடுத்துக் கொள்ள வேண்டும்?!

‘இந்தக் கட்டுரைத் தொடரில் பெரும்பாலும் பாருவைப் பற்றித்தான் இருக்கிறது. ஏன் தலைப்பிலும் கூட பாருவின் பெயர்தான் அதிகமாக வருகிறது,

இப்போதாவது புரிகிறதா, அவர்தான் இந்த சீசனின் முக்கியமான போட்டியாளர்.. அவரை மையமாக வைத்துதான் இந்த சீசன் நடக்கிறது. அவரை வைத்துதான் பிக் பாஸ் விமர்சனங்களும் நடக்கின்றன என்பது தெரிகிறதா?’ என்று பாருவின் ரசிகர்கள் கேட்கிறார்கள்.

யெஸ். அது உண்மைதான். இந்த சீசனின் கன்டென்ட் அட்சயப்பாத்திரம் என்றால் அது பாருதான். அவரால்தான் வீட்டில் நிறைய கலகங்கள் நடக்கின்றன. காமிராக்களுக்கு வயிறார தீனி கிடைக்கிறது என்பதில் மறுப்பே இல்லை.

ஆனால் பாருங்கள் நண்பர்களே.. என்னதான் ஒரு திரைப்படத்தில் வில்லனின் பாத்திரம் வலிமையாக இருந்தாலும், அந்த கேரக்டரை நாம் நிறைய ரசித்தாலும் இறுதியில் ஹீரோதான் வெல்வான். வில்லன் ஜெயிப்பதாக கதைகள் எழுதப்படாது.

எழுதப்படவும் கூடாது. ‘பாருதான் டைட்டில் வின்னர்’ என்று ஒருவர் ஆசைப்படுகிறார் என்றால் உலகத்தில் அநீதி வெல்ல வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் என்றுதான் பொருள்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 83

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –83 |27/12/2025

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 82

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –82 |25/12/2025

Share.
Leave A Reply