இயக்குநர் மாருதி இயக்கத்தில், ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ‘ராஜாசாப்’. ஹாரர்-காமெடி பாணியில் உருவான இப்படம், முதல் நாளில் பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்தால் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இருப்பினும், படத்திற்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் கடுமையாகச் சரிந்தது.
தற்போது வரை இப்படம் உலகளவில் சுமார் ரூ. 160 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது, இது சுமார் ரூ. 50 கோடிக்கும் மேல் நஷ்டத்தை ஏற்படுத்தும் என திரைத்துறை வட்டாரங்கள் கணிக்கின்றன. மேலும், 3 மணி நேர நீளமான திரைக்கதை மற்றும் அதிகப்படியான காட்சிகள் கட் செய்யப்பட்டிருந்தும் படத்தின் வேகம் ரசிகர்களின் பொறுமையைச் சோதிப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

