தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருக்கும் சமந்தா, தற்போது இரண்டாவது திருமணம் முடிந்து தனது சொந்த வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர், தனது முதல் கணவரின் நினைவாக குத்திய டாட்டூவை இன்னும் அகற்றாமல் இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்த முழு தகவல், இதோ..
தமிழ், தெலுங்கு திரையுலகுகளில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்தவர், சமந்தா. தமிழில், ‘பானா காத்தாடி’ படம் மூலம் நாயகியாக அறிமுகமான இவர், அதற்கு முன்பாகவே மாஸ்கோவின் காவிரி படத்திலும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு தமிழில் சில நாட்களிலேயே பெரிய அளவிளான மார்கெட் கிடைத்தது. தாெடர்ந்து, தெலுங்கு திரையுலகிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார்.
சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த சமந்தா!
நடிகை சமந்தா, தெலுங்கில் நான் ஈ, யே மாயா சேசாவே உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்த அவர், அடுத்ததாக தமிழிலும் கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட பல பெரிய ஹிட் படங்களில் நடித்தார். இவரும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 2017ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இந்த திருமணம் மூன்று ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை. 2021ல் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
சமந்தா – நாக சைதன்யாவின் பிரிவு அவரது ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர வைத்தது. இந்த விவாகரத்திற்கு பிறகு, சிங்கில் ஹீரோயின் சப்ஜெக்ட்களில் சமந்தா நடித்து வந்தார்.
ஆனால், அந்த படங்கள் அனைத்தும் தோல்வியடைந்தது. பின்னர் அவருக்கு, மயோசிடிஸ் எனப்படும் தசை சிதைவு நோய் ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், சினிமாவில் இருந்து சில நாட்கள் பிரேக் எடுப்பதாக அறிவித்தார். அப்போது பிரேக் எடுத்தவர்தான், இப்போது வரை வேறெந்த படத்திலும் நடிக்கவில்லை.
இரண்டாவது திருமணம்..
சமந்தா, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொருவை கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ராஜ் நிடிமொரு, சமந்தா நடித்திருந்த வெப் தொடரான ‘சிட்டடெல்’ தொடரை இயக்கியிருந்தார்.
அந்த சமயத்தில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்பு இவர்கள் காதலர்கள் ஆகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இவர்களின் திருமணம், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சில உறவினர்கள் மத்தியில் நடைப்பெற்றது. இதற்கு முன்பாக, சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யாவிற்கும், சோபிதாவிற்கும் திருமணம் நடந்தது. இவர்களுடையதும் காதல் திருமணம்தான்.
நாக சைதன்யா நினைவாக குத்திய டாட்டூ!
சமந்தா, நாக சைதன்யாவுடன் உறவில் இருந்த போது அவரது பெயரை மார்புக்கும் இடுப்புக்கும் இருக்கும மத்திய பகுதியில் டாட்டூ குத்தியிருந்தார். அது குறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவை கூட இன்னும் டெலிட் செய்யாமல் இருக்கிறது.
அதே போல, தனது கழுத்திற்கு பின்னால், YMC என்று டாட்டூ குத்தியிருப்பார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு ரீ-மேக்தான், “Ye Maaya Chesave”. இது சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒன்றாக சேர்ந்து நடித்த முதல் படமாகும்.
இதன் நினைவாகத்தான் அவர் YMC என்பதை டாட்டூவாக குத்தியிருந்தார். இந்த டாட்டூவை அவர் அகற்றி விட்டதாக சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
ஆனால், சமந்தாவின் சமீபத்திய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவருடைய கழுத்துக்கு பின்னால் இன்னும் ‘YMC’ என்கிற டாட்டூ இருப்பது தெரிகிறது. நாக சைதன்யா நினைவாக அவர் குத்திய டாட்டூவை இன்னும் அவர் அகற்றாமல் இருப்பது குறித்து பலரும் இணையத்தில் பேசி வருகின்றனர்.
View this post on Instagram

