2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 12 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தொடரின் 13 வது போட்டி கெளகாத்தியில் நடைபெற்றது.

இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதின. இப்போட்டி வழக்கம்போல் 20 ஓவர்களாக நடக்காமல் 11 ஓவர்களாகவே நடந்தன. போட்டிக்கு முன்பாக தொடங்கிய மழை விடாமல் பெய்தது. இதனால் டாஸ் 9.55 க்கு தான் வீசப்பட்டது.

11 ஓவர்களில் 150 ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவன்சி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை கையாண்டனர்.

இந்த கூட்டணி 5 ஓவர்களுக்கு 80 ரன்களை குவித்த பின்னரே பிரிந்தது. சூர்யவன்சி 14 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில், வெளியேறினார்.

இதையடுத்து வந்த துருவ் ஜுரேல் 2 ரன்களில்வெளியேறினார். பின்னர் ரியான் பராக் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடக்கத்தில் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 பந்தில் 77 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் எடுத்தது.

சொதப்பிய மும்பை இந்தியன்ஸ்

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 151 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற இலக்குடன் களமிறங்கியது.

தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிக்கில்டன் ஆகியோர் ஜெய்ஸ்வால், சூர்யவன்சி போல் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடக்கமே 3 விக்கெட்களை இழந்து தடுமாறினர்.

ரியான் ரிக்கில்டன் 8, சூர்யகுமார் யாதவ் 6, ரோகித் சர்மா 5 என ஒற்றை இலக்கு ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினர்.

இதையடுத்து களம் வந்த ஹர்திக் பாண்டியா ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 9 ரன்களில் அட்டமிழந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இதனைத் தொடர்ந்து திலக் வர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களத்திற்கு இம்பேக்ட் வீரராக வந்த ருதர்போர்டு கொஞ்சம் அதிரடி காட்டினார்.

ஆனால் 8 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதேபோல் நமன் தீரும் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 123ரன்கள் எடுத்த நிலையில், 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் மும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் சரிவு

மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் சரிவை கண்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. இதையடுத்து டெல்லி மற்றும் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சென்றுள்ளது.

முதல் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று 3வது இடத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற நிலையில், 6 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

Share.
Leave A Reply