வவுனியா – பட்டா னிச்சூர் பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வுவனியா நகரிலிருந்து மன்னார் வீதி வழியாக துவிச் வண்டியில் பயணித்த நபர் சடுதியாக வீதியின் மறுபக்கத்திற்கு திரும்ப முயன்றபோது’ பின்னால் வந்த லொறி மோதி படுகாய மடைந்துள்ளார்.

இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில்
அனுமதித்தபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை விபத்தில் சம்மந்தப்பட்ட லொறியின் சஈரதி லொறியை கைவிட்டு தப்பியோடியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார், விபத்து தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

தப்பி யோடிய லொறியின் சாரதியைக் கைது செய்வதற் கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply