செ.தி.பெருமாள் பலாங்கொடையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த சிறிய ரக கார் ஒன்று, இன்று காலை பொகவந்தலாவ – ஹட்டன் பிரதான வீதியில் நோர்வூட்‌ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென் ஜோன் டிலரி பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிவேகமாகப் பயணித்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.

பள்ளத்தில் இருந்த கெசல்கமுவ ஓயாவிற்கு அருகில் கார் வீழ்ந்ததில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

பாதிப்பு விபரங்கள்:  விபத்தின் போது காரில் பயணித்த ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்தோர்: காரின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை: விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share.
Leave A Reply