இலங்கை திறைசேரியிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணைப் பணம் காணாமல் போயுள்ளமை அல்லது ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளமை தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அரசாங்க நிதி குழுவின் (COPF) முன்னிலையில் இன்று முன்னிலையாகுமாறு திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்றைய தினம் குழு முன்னிலையில் தாம் முன்னிலையாகப் போவதில்லை எனச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், குறித்த நிதி மோசடி தொடர்பான முழுமையான விபரங்களை ஜனாதிபதி நேரடியாக நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தவுள்ளதால், தாம் தற்போது குழு முன்னிலையில் முன்னிலையாக வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த நிதி விவகாரத்தில் ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை மிக முக்கியத்துவமிக்கதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply