உலகளாவிய ரீதியில் உழைப்பாளிகளின் உரிமைகளைப் பறைசாற்றும் சர்வதேச மே தினம் நாளை (01.05.2026) கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து நாட்டின் பல பகுதிகளிலும் பிரம்மாண்டமான மே தினப் பேரணிகள் மற்றும் பகிரங்கக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

குறிப்பாக, கொழும்பில் பல்வேறு அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளதால், நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பொலிஸ் திணைக்களம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், கொழும்பின் பல பிரதான வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டு அல்லது மட்டுப்படுத்தப்பட்டு மாற்றுப் போக்குவரத்துத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. உழைப்பாளர்களின் கௌரவத்தைப் போற்றும் வகையில் நாளை பொது விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply