போலந்து நாட்டை சேர்ந்தவர் இகா ஜெசிகா. இவரது தலையில் மூளைக்கு அருகே புற்றுநோய் கட்டி உருவாகி இருந்தது. எனவே, அதை அகற்ற ஆபரேசன் நடந்தது.
அதற்காக அவர் தென்மேற்கு போலந்தில் கொளடோவைஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் குழுவினர் மயக்க மருந்து செலுத்தி அவருக்கு ஆபரேசன் செய்து கொண்டிருந்தனர்.
அவரது தலையின் மண்டை ஓட்டை அகற்றி விட்டு மூளை அருகே புற்று நோய் கட்டியை அகற்ற தொடங்கினர். அப்போது இகா ஜெசிகாவுக்கு மயக்கம் தெளிந்தது. திடீரென எழுந்த அவர் டாக்டர்களிடம் கேள்வி கேட்க தொடங்கினார்.
பூனைகள் பற்றியும், தனது ஆபரேசன் நடக்கும் முறை குறித்தும் கேட்டறிந்தார். இது டாக்டர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
பொதுவாக ஆபரேசன் போது இதுபோன்று நடக்க வாய்ப்பில்லை. அபூர்வமாக தான் இதுபோன்று நடக்கும் என அதிசயித்தனர்.