ஒருவரின் உடலில், தோற்றத்தை அழகுப்படுத்திக் காட்டுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது கண்கள். கண்டிப்பாக இதனை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.
ஒருவரின் ஆத்மாவின் ஜன்னல்களாக கண்கள் விளங்குகிறது எனவும் சொல்லப்படுகிறது. ஆத்மாவை போலவே அனைவருக்குமே ஒரே நிறத்திலான கண்கள் இருப்பதில்லை.
ஒருவரின் உணர்ச்சிகளை கண்கள் சிறப்பாக வெளிப்படுத்தும். அவரின் மனநிலையையும் அது தெளிவாக வெளிக்காட்டும். நம் கண்களின் மூலமாகவே அன்பு, பாசம், கவனிப்பு, காதல், அலட்சியம், வெறுப்பு என பல விதமான உணர்வுகளை காட்டலாம். சரி, கண்களின் நிறங்கள் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி பார்க்கலாமா?

நாம் செல்லும் இடமெல்லாம் நாம் நம் ஆளுமையையும் அழைத்துச் செல்கிறோம். எதிர் பாலினத்தவர்களை ஈர்க்க கண்கள் ஒரு முக்கிய மூலமாக விளங்குகிறது. கூட்டத்தில் இருந்து நம்மை தனித்து காட்டவும் கண்கள் நமக்கு உதவுகிறது.
நம்முடைய தனித்துவம் மற்றும் பிரத்தியேக குணத்தை அடைய நம் கண்களின் நிறம் நமக்கு உதவுகிறது. நாம் வேறு கண்டத்தில் இருந்தாலும் சரி, வேறு இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, இந்த குணங்கள் பொதுவானவையாகவே இருக்கும்.
சரி உங்கள் கண்களின் நிறம் உங்களை பற்றி என்ன சொல்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? தொடர்ந்து படியுங்கள்!
05-1420437561-1ec

பலருக்கும் உள்ள பொதுவான கண்களின் நிறம் பழுப்பே. மற்ற நிற கண்களை கொண்டவர்களை விட இவர்கள் நல்ல குணத்துடன் பாசமிக்கவராக இருப்பார்கள். ஈர்க்கும் படியாக இவர்கள் இருப்பார்கள்.
இவர்களுடன் சுற்றுவது மிகவும் சந்தோஷத்தை அளிக்கும். பழுப்பு நிற கண்களை உடையவர்கள் மிகவும் உருஹ்டியுடன் இருப்பார்கள்.
நடக்க போவதை எண்ணி அவர்கள் மிகவும் அரிதாகவே கவலை கொள்வார்கள். அதே மாதிரி நண்பர்கள் அமைத்துக் கொள்வதிலும் அவர்கள் கில்லாடி ஆவார்கள்.05-1420437568-2ec

சாம்பல் நிற கண்கள்

சாம்பல் நிற கண்களை கொண்டவர்கள் அமைதியானவர்களாக, புத்திசாலித்தனமாக மற்றும் ஒழுக்கத்துடன் இருப்பார்கள். முக்கால்வாசி எதையும் அவர்களுக்குள் வைத்துக் கொள்வார்கள்.

ஆனால் மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக விளங்குவார்கள். சாம்பல் நிற கண்களை கொண்டவர்கள் அவர்களின் உட்புற வலிமை, பகுத்தறிவு சிந்தனை போன்றவற்றை பேசுவார்கள். அவர்கள் மிகப்பெரிய தலைவர்களாக மாறுவார்கள்.

05-1420437574-3ec

கருப்பு நிற கண்கள்
பொதுவான ஒன்றாக கருதப்பட்டாலும் கூட கருப்பு நிற கண்கள் என்பது அரிதான ஒன்றே. கருப்பு நிற கண்களை கொண்டவர்கள் ரகசியமிக்கவர்களாகவும், எளிதில் உணர்ச்சிக்கு ஆட்பட்டவர்களாகவும் இருப்பார்கள். எளிதில் யாரையும் நம்பி விட மாட்டார்கள். ஆனால் நண்பராகி விட்டால், அவர்களை கண்டிப்பாக நம்பலாம். பொறுமை இல்லாதவர்களாக இருந்தாலும் கூட நேர்மறையான நம்பிக்கை அதிகளவில் இருக்கும்.
05-1420437582-4ec

பச்சை நிற கண்கள்

மற்றொரு விரும்பும் படியான கண்களின் நிறமாக இருப்பது பச்சை. பச்சை நிற கண்களை கொண்டவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள்.

ஒரு உறவில் அவர்கள் எளிதில் உணர்ச்சிக்கு ஆட்பட்டவர்களாக இருப்பார்கள. நண்பர்களாக இருக்கும் போது, ஒரு கோமாளியாக இருந்து உங்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பார்கள். முழுமையான வாழ்க்கையை வாழ அவர்கள் ஆசைப்பட்டாலும் கூட, அதிகமான பொறாமை குணத்துடனும் இருப்பார்கள்.

05-1420437589-5ec

நீல நிற கண்கள்
உலகத்தில் பலருக்கும் பிடித்த கண்களின் நிறம் என்றால் அது நீல நிறம் தான் என வாக்குவாதமே இல்லாமல் சொல்லி விடலாம். பொதுவாகவே நீல நிற கண்களை கொண்டவர்கள் அழகாகவும், அன்பாகவும், அறிவாளியாகவும் இருப்பார்கள். கூர்ந்து கவனிக்கும் ஆற்றல்களுக்கும், பிறருக்கு தேவைப்படும் போது கைக்கொடுப்பதிலும் இவர்கள் நன்றாக அறியப்படுவார்கள். அவர்கள் கண்களின் நிறம் அவ்வளவு அழகாக இருப்பதால், பார்ப்பதற்கும் வசீகரத்துடன் நல்ல நண்பனை போல் தெரிவார்கள்.

05-1420437598-6ec

தங்க நிறத்திலான கண்கள்
மர்மமாக கருதப்படும் தங்க நிற கண்களை கொண்டவர்கள் யாரையும் சாராமல் இருப்பார்கள். அழகுடைய, அன்புடைய, சந்தோஷமான மற்றும் தனித்துவமான குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள் இவர்கள். தன்னிச்சையாக இருப்பதற்காக அறியப்படும் இவர்களுடன் இருப்பது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்.
Share.
Leave A Reply