மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய ஜனாதிபதியிடம் கையளிப்பார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான இல்லத்திலிருந்தும் அவர் இன்று காலை வெளியேறிவிட்டார்.
தேர்தல் முடிவுகள் முழுமையாக இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அதிகாலை பிரதான எதிர்கட்சித் தலைவர் ரணில் விகரமசிங்கவை அவர் சந்தித்த பிறகு தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறினார்.
தேர்தல் முடிவு குறித்த முன்னணி நிலவரம் தெரிய வந்ததும் நாடெங்கிலும் மைத்திரி ஆதரவாளர்கள் பட்டாசுகளைக் கொளுத்திக் கொண்டாடினார்கள் .
தேசிய அளவில் இரு பிரதான வேட்பாளர்களும் இதுவரை பெற்றுள்ள வாக்குகள் விபரம்
Mahinda Rajapaksa
மைத்திரி, ரணில் இன்று சத்தியப்பிரமாணம்
09-04-2014
எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
புதிய பிரதமராக ரணி;ல் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும்.
இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன, தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
புதிய ஜனாதிபதியின் சத்தியப்பிரமாண நிகழ்வு, கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டைவிட்டுச் செல்ல மாட்டோம்: பசில், நாமல்
09-01-2015 11:04 AM
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த நாட்டை விட்டுச் செல்லமாட்டோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பசில் ராஜபக்ஷ, ‘ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து, அவற்றுக்கு எந்தவொரு தடையும் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாம் நினைக்கிறோம்’ என அவர் கூறினார்.