கொழும்பு: இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜினாமா செய்துள்ளார்.

அவருக்குப் பதிலாக புதிய பாதுகாப்பு செயலாளராக பசநாயக்கவை அதிபர் மைத்ரிபால சிறிசேன நியமித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றதைத் தொடர்ந்து அவரால் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர்.

கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா! புதிய பாதுகாப்பு செயலராக பசநாயக்க நியமனம்! இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முதலொல் தமது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாயவும் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு செயலராக சுற்றுச் சூழல் அமைச்சக செயலர் பசநாயக்கவை நியமித்து அதிபர் மைத்ரிபால உத்தரவிட்டுள்ளார்.
apayakon
அபயகோன்
இதேபோல் அதிபரின் செயலாளராக பொதுநிர்வாக அமைச்சகத்தின் செயலாளர் அபயகோன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவைத்தான் பாதுகாப்பு செயலராக நியமிக்க மைத்ரிபால் சிறிசேன முடிவு செய்திருந்தாராம்.

ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பசநாயக்கவை மைத்ரிபால நியமித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கை செய்திகள்

Share.
Leave A Reply