ஏழா­வது ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­களின் ஆணையைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யதன் மூலம் மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் ஏழா­வது ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

பள்­ளே­வத்தே கம­ரால லாகே மைத்­திரி­பால யாபா சிறி­சேன எனும் முழுப் பெயரைக் கொண்ட இவர் 1951ஆம் ஆண்டு ஐப்­பசி மாதம் 3ஆம் திகதி பௌத்த சம­யத்தைப் பின்­பற்றும் மத்­திய தர விவ­சாயக் குடும்­பத்தில் பிறந்தார்.

mathiriaaaaதற்­போது இவ­ருக்கு வயது 63.

ஜயந்தி புஷ­ப­கு­மாரி என்­ப­வ­ருடன் திரு­மண வாழ்க்­கையில் இணைந்து கொண்ட இவ­ருக்கு இரு மகள்­மாரும் ஒரு மகனும் உள்­ளனர்.

கல்வி:

1955 இல் பொலன்­ன­றுவ லக் ஷ உயன பாட­சா­லையில் ஆரம்பக் கல்­வியைப் பெற்ற இவர் பொலன்­ன­றுவை தப்­போவௌ மகா வித்­தி­யா­லயம், பொலன்­ன­றுவை றோயல் மத்­திய கல்­லூரி ஆகி­ய­வற்றில் கல்­வியைத் தொடர்ந்தார்.

குண்­ட­சாலை இலங்கை விவ­சாயக் கல்­லூ­ரியில் இணைந்து விவ­சாயத் துறையில் டிப்­ளோமா பட்­டத்தைப் பெற்ற இவர் ரஷ்­யாவின் மாக்சிம் கோர்க்கி கல்­விக்­கூ­டத்தில் அர­ச­றி­வியல் துறையில் டிப்­ளோமா பட்­டத்­தையும் பெற்றார்.

தொழில் வாழ்க்கை

1974 இல் தனது முத­லா­வது தொழி­லாக பொலன்­ன­று­வையில் கூட்­டு­றவு கொள்­வ­னவு உத்­தி­யோ­கத்­த­ராக பத­வி­யேற்றார். 1976 இல் கிராம உத்­தி­யோ­கத்­த­ராக கட­மை­யேற்று, நாளாந்த நிர்­வாக விட­யங்­களில் அயல் கிரா­மங்­க­ளுக்கும் சேவை­யாற்­றினார். 1978 இல் தனது தொழிலை இரா­ஜி­னாமாச் செய்து முழு­நேர அர­சி­யலில் கள­மி­றங்­கினார்.

maithiri-4 copieஅர­சியல் வாழ்க்கை

1967இல் பொலன்­ன­றுவை றோயல் மத்­திய கல்­லூ­ரியில் ஜீ.சீ.ஈ. சாதா­ரண தரப் பரீட்­சையை பூர்த்தி செய்த காலப்­ப­கு­தியில், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் இளைஞர் அமைப்பின் அங்­கத்­த­வ­ரா­கவும், அதன் பொலன்­ன­றுவைத் தொகு­திக்­கான செயலாள­ரா­கவும் தெரிவு செய்­யப்­பட்டார்.

இவர் 1970 இல் ஒரு மாண­வ­ராக இருக்கும் போதே சுதந்­திரக் கட்­சியின் தேர்தல் பிர­சா­ரத்தில் ஊக்­கத்­துடன் பங்­கேற்றார்.

1977 இல் தீவிர அர­சி­யலில் கால் பதித்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யி­னது மத்­திய குழுவின் பொலன்­ன­றுவைத் தேர்தல் தொகுதி செய­லா­ள­ராகத் தெரிவு செய்­யப்­பட்டார்.

1977 தேர்­தலில் இவர் முக்­கிய பங்கு வகித்­த­துடன், தேர்­த­லுக்குப் பிந்­திய வன்­மு­றைகள் கார­ண­மாக பல சிர­மங்­களை எதிர்கொண்டார். அதே­வ­ருடம் கியூ­பாவில் நடை­பெற்ற சர்­வ­தேச இளைஞர் மாநாட்டில் பங்­கேற்றார்.

1979 இல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொலன்­ன­றுவை மாவட்ட செய­லா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்டார். 1980 இல் மாவட்ட மட்­டத்தில் சுதந்­திரக் கட்­சியை வழி­ந­டத்­து­வ­தற்­காக அதன் பொலன்­ன­றுவை மாவட்ட அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

1981 இல் அகில இலங்கை சுதந்­திரக் கட்­சியின் இளைஞர் ஸ்தாப­னத்தின் பொரு­ளா­ள­ராக மைத்திரி மாறினார். அதன் மூலம் கட்­சியின் உயர்­மட்ட தீர்­மா­னங்­களை எடுக்கும் அமைப்­பான மத்­திய குழுவின் அங்­கத்­த­வ­ராகும் வாய்ப்பை அவர் பெற்றார்.

1989 ஆம் ஆண்டு பிர­தான அர­சியல் நீரோட்­டத்தில் இணைந்தார். அக்­காலம் தொடக்கம் 1994 வரை பல அமைச்சுப் பத­வி­களை வகித்தார்.

1989இல் முதற்­த­ட­வை­யாக பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் இருந்து பொதுத் தேர்­தலில் போட்­டி­யிட்டு 1989ஆம் ஆண்டு மாசி மாதம் 15ஆம் திகதி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரிவு செய்­யப்­பட்டார்.

1994ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் ஆகக்­கூ­டு­த­லான விருப்பு வாக்­கு­களைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, நீர்ப்­பா­சனப் பிர­தி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

1997 இல் இவ­ருக்கு மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் பாரா­ளு­மன்ற அலு­வல்கள் என்ற அமைச்சுப் பதவி வழங்­கப்­பட்­ட­துடன் சுதந்­திரக் கட்­சியின் உதவிச் செய­லா­ள­ரா­கவும் தெரிவு செய்­யப்­பட்டார். 2000 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உப­த­வி­சா­ள­ராக தெரி­வானார்.

2001 இல் 12 ஆவது பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­வா­ன­துடன், ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்டார்.

2004 ஆம் ஆண்டில்  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும், மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்­கு­மி­டை­யி­லான வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்டார். இதன் மூலமே கூட்­டணி அர­சாங்­க­மான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உரு­வா­னது.

இலங்­கையின் 13ஆவது பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வாகி, அமைச்­ச­ரவை அந்­தஸ்­து­டைய மகா­வலி, ஆற்­றுப்­ப­டுக்கை மற்றும் ரஜ­ரட்ட அபி­வி­ருத்தி அமைச்­ச­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்டார். இவர் பாரா­ளு­மன்ற சபை முதல்­வ­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்டார்.

2005ஆம் ஆண்டு கார்த்­திகை மாதம் இலங்கை அர­சாங்­கத்தில் மைத்திரி­பால சிறி­சேனவுக்கு இரு அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­பட்­டன. சுற்­றாடல், நீர்ப்­பா­சன, மகா­வலி அபி­வி­ருத்தி அமைச்­ச­ரவை அமைச்­ச­ரா­கவும் சுற்­றாடல் மற்றும் இயற்கை வள அமைச்­ச­ரா­கவும் அவர் நிய­மிக்­கப்­பட்டார்.

2006 ஆம் ஆண்டு மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய தேசிய கட்சி ஆகி­ய­வற்­றிற்கு இடை­யி­லான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில், ஐக்­கிய தேசிய கட்­சியின் அப்­போ­தைய தவி­சாளர் மலிக் சம­ர­விக்­ர­ம­வுடன் கைச்­சாத்­திட்டார். இது சிவில் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்­காக அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழைப்­பது தொடர்­பான உடன்­ப­டிக்­கை­யாகும்.

2007இல் இவர் விவ­சாய அபி­வி­ருத்தி மற்றும் கம­நல சேவைகள் அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக கட­மை­யாற்­றினார்.

2007ஆம் ஆண்டு தை 25ஆம் திகதி மகா­வலி பிர­தான திட்­டத்தின் கீழ் மொர­க­ஹ­கந்த – களு­கங்கை கருத்­திட்­டத்தை தொடக்கி வைத்தார்.

2010ஆம் ஆண்டு மைத்­திரி­பால மீண்டும் பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­வாகி, ஐ.ம.சு.மு. அர­சாங்­கத்தில் சுகா­தார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார். 2014 நவம்பர் 20 ஆம் திகதி வரை இப் பத­வியை அவர் தொடர்ந்து வகித்தார்.

maithiria copieவிரு­துகள்

சுகா­தார அமைச்­ச­ராக பதவி வகித்த சமயம் புகைத்­தலை தடுப்­பதில் காட்­டிய அர்ப்­ப­ணிப்­பிற்­காக ‘உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அங்­கீ­காரம்’ என்ற விருதை வென்றார். இலங்­கையர் ஒரு­வ­ருக்கு இந்த விருது கிடைத்த முதல் சந்­தர்ப்பம் இது­வாகும்.

2013ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவின் பொதுச் சுகா­தார ஹார்வாட் கல்­லூரி மற்றும் கென்­னடி அரச கல்­லூ­ரியின் ‘சுகா­தா­ரத்­துறை சார்ந்த அமைச்சு மட்ட ஹார்வாட் விருதைப்’ பெற்றார்.

இந்த விருது இலங்­கையின் சுகா­தார அமைச்­ச­ராக புது­மை­மிக்க தலை­மைத்­து­வத்தில் கொண்­டி­ருந்த திட­சங்­கற்­பத்­திற்­காக வழங்­கப்­பட்­டது.

இத்­த­கைய விருதின் மூலம் இலங்­கையர் ஒருவர் கௌர­விக்­கப்­ப­டு­வது இதுவே முதற்­த­ட­வை­யாகும்.

2013ஆம் ஆண்டு ஜெனீ­வாவில் நடை­பெற்ற உலக சுகா­தாரக் கூட்­டத்தில் ஜீ-15 நாடு­க­ளுக்குத் தலைமை தாங்­கினார். இந்தக் கூட்­டத்தில் சுகா­தார விவ­கா­ரங்கள் தொடர்­பான ஜீ-15 அறிக்­கையை வாசித்தார். 2014ஆம் ஆண்டு உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் உலக சுகா­தார கூட்­டத்தில் நான்கு உப­த­லை­வர்­களுள் ஒரு­வ­ராகத் தெரி­வானார்.

புலிகளின் கொலை முயற்­சிகள்

2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெலி­கந்த பிர­தேசத்தில் விடு­தலைப் புலி­கள்­ இ­யக்­கத்தின் தற்­கொலை குண்டுத் தாக்­குதல் முயற்­சியில் இருந்து இவர் உயிர் தப்­பினார்.

பாது­காப்பு பிரிவைச் சேர்ந்­த­வர்கள் வழங்­கிய தக­வலின் அடிப்­ப­டையில் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய விடு­தலைப் புலி அங்கத்­த­வர்கள் மூன்று பேர் கைது செய்­யப்­பட்­டனர்.   பின்னர் அவர்கள் சயனைட் குப்­பியை விழுங்கி தற்­கொலை செய்து கொண்­டனர்.

2008ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 9 ஆம் திகதி புலிகள் இயக்­கத்தால் இவர் இலக்கு வைக்­கப்­பட்டார். பண்­டா­ர­கம பிர­தே­சத்தில் முகூர்த்­தக்கால் நடும் வைப­வத்தில் கலந்து கொண்டு திரும்­பிய சமயம் அவர் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. இந்த சம்­ப­வத்தில் மைத்­தி­ரி­பால சிறி­சேன மயி­ரி­ழையில் உயிர் தப்­பினார். இத் தாக்­கு­தலில் நால்வர் பலி­யா­கி­ய­துடன் 15 பேர் காய­ம­டைந்­தனர்.

சிறை வாழ்க்கை

1971ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்­சியைத் தொடர்ந்து கைது செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்டார். 18 மாதங்கள் சிறை­வாசம் அனு­ப­வித்த பின்னர் இந்தக் கிளர்ச்­சியில் இவ­ருக்கு தொடர்­பே­து­மில்லை என்­பது நிரூ­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து இவர் விடு­தலை செய்­யப்­பட்டார்.

பின்னர் திரு­மதி சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க அம்­மை­யாரின் குடி­யு­ரி­மைகள் பறிக்­கப்­பட்­டதை எதிர்க்கும் ஆர்ப்­பாட்­டங்­களில் பங்­கேற்­ற­மைக்­காக மீண்டும் சிறையில் அடைக்­கப்­பட்டார்.

பதில் பாது­காப்பு அமைச்சர்

2009 ஆம் ஆண்டு போர் உச்­சத்தில் இருந்த சமயம், மைத்­திரி­பால சிறி­சேன ஐந்து தட­வைகள் இலங்கையின் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். போரின் இறுதி நாட்களிலும் பாதுகாப்பு அமைச்சரான ஜனா திபதி நாட்டில் இல்லாத நிலையில் இவரே பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றினார்.

நல்லாட்சிக்கான பயணம்

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நல்லாட்சியை தோற் றுவிக்கும் நோக்கில் தனது அமைச்சுப் பதவியைத் துறந்து பொது எதிரணி சார்பில் களமிறங்கினார்.

இதற்கமைய நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 6,217,162 ( 51.28 வீதம்) வாக்குகளைப் பெற்று நாட்டின் ஏழா வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் ஒரு விவ சாயியின் மகனாக பிறந்த இவர் இன்று இல ங்கை ஜனநாயகக் குடியரசின் அதி மேதகு ஜனாதிபதியாக வாழ்வில் உயர்வு பெற்றி ருக்கிறார்.

– எம்.பி.எம்.பைறூஸ் –

Share.
Leave A Reply