திரிஷா திரையுலகுக்கு வந்து 12 வருடங்கள் நிறைவடைந்து, 13–வது வருடம் நடக்கிறது. ஆரம்ப காலத்தில், அவர் கதாநாயகிகளுக்கு தோழியாக துணை வேடங்களில் நடித்தார். பிரியதர்ஷன் டைரக்டு செய்த ‘லேசா லேசா’ படத்தில், கதாநாயகியாக அவர் அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். 2 மொழி பட உலகிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக அவர் இருந்து வருகிறார்.

இவருக்கும், தொழில் அதிபரும், பட அதிபருமான வருண் மணியனுக்கும் இடையே காதல் மலர்ந்து இருக்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள். இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து இரண்டு பேரின் பெற்றோர்களும் சென்னை செனடாப் சாலையில் உள்ள திரிஷா வீட்டில் சந்தித்து பேசினார்கள்.
12-1421046621-trisha-varun-maniyan-500
அப்போது, ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை திரிஷா கைவிரலில், வருண் மணியன் அணிவித்தார். திரிஷாவும், வருண் மணியனுக்கு மோதிரம் அணிவித்தார்.

இந்த நிலையில் தனக்கும், வருண் மணியனுக்கும் வருகிற 23–ந் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக திரிஷா அறிவித்தார். இது, 2 குடும்பத்தினரும் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட நிகழ்ச்சி என்று அவர் கூறினார்.

12-1421046866-trisha-saree1-600நிச்சயதார்த்தத்தின்போது, திரிஷா–வருண் மணியன் திருமண தேதி முடிவு செய்யப்படுகிறது.

முன்னதாக, திரிஷா திரையுலக நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் விருந்து கொடுக்க முடிவு செய்து இருக்கிறார். கடந்த 12 வருடங்களாக தனக்கு ஆதரவு கொடுத்த பட அதிபர்கள், நடிகர்–நடிகைகள் ஆகியோரை அந்த விருந்துக்கு அழைக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இந்த விருந்து நிகழ்ச்சி, வருகிற 24–ந் தேதி இரவு 7 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. விருந்துக்கு வரும் அனைவரையும் திரிஷாவும், வருண் மணியனும் ஜோடியாக நின்று வரவேற்கிறார்கள்.

திருமணம் மார்ச் மாதம் நடக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. பறக்கும் விமானத்தில் திருமணத்தை நடத்த யோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் திரிஷாவும் வருண்மணியனும் தனி விமானத்தில் இந்தியாவை சுற்றி வந்தனர். ஆக்ரா சென்று தாஜ்மகாலையும் கண்டு களித்தார்கள். எனவே விமானம் ஒன்றை வாடகைக்கு பிடித்து திருமணத்தை நடத்த பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

திரிஷா நடித்த என்னை அறிந்தால் படம் வருகிற 29-ந்தேதி வெளியாகிறது. ஜெயம் ரவியுடன் நடித்த பூலோகம் படம் முடிவடைந்து ரிலீசுக்கு காத்து இருக்கிறது. மேலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. திருமணத்துக்கு முன்பு அந்த படங்களையும் முடித்து விட திட்டமிட்டு உள்ளார்.

Share.
Leave A Reply